தெற்குகள்ளிகுளம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோனியார் ஆலய 92-வது திருவிழா நாளை (8-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க நாளில் காலை 5.45 மணிக்கு கூட்டுத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை 5.45 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மன்றாட்டு மாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.

வரும் 13-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு அரட்டை அரங்கமும், அடுத்த நாள் காலை 5.30 மணிக்கு தமிழர் திருவிழா சிறப்பு திருப்பலியும், காலை 9 மணிக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும், இரவு 8.30 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

வரும் 15-ம் தேதி காலை 9 மணிக்கு இளைஞர்கள் நடத்தும் விளையாட்டு போட்டிகளும், பிற்பகல் 2.45 மணிக்கு சப்பர பவனியும், இரவு 8.30 மணிக்கு நடனம், மாறுவேடம் மற்றும் பாடல் போட்டியும் நடைபெறுகிறது.

விழாவின் 9-ம் நாளான 16-ம் தேதி இரவு 10 மணிக்கு புனிதரின் தேர்பவனி நடைபெறுகிறது. 17-ம் தேதி காலை 10 மணிக்கு திறன் போட்டிகள், மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு பனிமலர் 3-ம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா எம்.ஜெபஸ்டின் ஆனந்த், பங்குத்தந்தை ஜெபால்டு ரவி, உதவி பங்குத்தந்தை அந்தோனி ஜெபஸ்டின் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்