நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார்

By செய்திப்பிரிவு

நிலத்தை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பெண் ஒருவர் புகார் மனு அளித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி (35). இவர், தனது 2 மகன்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது, நிலம் அபகரிப்பு தொடர்பாக ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் அவர் மனு ஒன்றை அளித்தார். அம் மனுவில் கூறியிருப்பதாவது, "கொல்லைமேடு பகுதியில் எனது கணவர் பிச்சாண்டிக்கு சொந்த மான இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். என்னுடைய 2 மகன்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். எனது குடும்ப வருவாய்க்காக நான் கூலி தொழில் செய்து வருகிறேன். இந்நிலையில், குடிசை வீட்டில் வசித்து வரும் எனக்கு அரசு சார்பில் பசுமை வீடு ஒதுக்கப் பட்டுள்ளது.

இதையறிந்த எனது கணவரின் உறவினர்கள், என் கணவருக்கு பணம் தருவதாகக் கூறி எங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துக்கொண்டு எங்களை வெளியேறுமாறு கூறுகின்றனர்.

இதுகுறித்து லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு சொந்தமான இடத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை பெற்ற அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்