17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 4,16,316 குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளுக்காக போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் ஜனவரி17-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக கடலூரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில், விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையிலும் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 1,611 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 44 ஆயிரத்து 714 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,666 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 1,71,604 குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து வழங்கப் படவுள்ளது. இப்பணிகளில் சுகாதாரத் துறையுடன் பள்ளிக் கல்வித்துறை, ஊட்டச்சத்து துறை, சமூகநலத்துறை, வருவாய் துறை, இந்திய குழுந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று செயல்படவுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். தொடர்ச்சியாக 18, 19-ம் தேதிகளில் சுகாதார களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்