ஈரோட்டில் இன்று முதல்வர் தேர்தல் பிரச்சாரம் அரசு நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து

By செய்திப்பிரிவு

தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று ஈரோடு வரும் முதல்வர் பழனிசாமி, தொடங்கிவைக்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று (6-ம் தேதி) பவானியில் பிரச்சாரத்தைத் தொடங்கும் முதல்வர் பழனிசாமி, இரவு கோபி பொதுக்கூட்டத்தில் நிறைவு செய்கிறார். நாளை (7-ம் தேதி) ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தொடங்கி இரவு பெருந்துறை பொதுக்கூட்டத்தில் நிறைவு செய்கிறார்.

இதனிடையே முதல்வர் பழனிசாமியின் வருகையின் போது, பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் வருவதால், இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கும் விழாவில், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க திட்டமிடப் பட்டது. அதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணி உள்பட பல்வேறு அரசு திட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கவும், நலத்திட்டங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்