ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதி மீறியதாக 7.89 லட்சம் வழக்குகள் பதிவு ரூ.2.22 கோடி அபராதம் வசூல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 7 லட்சத்து 89 ஆயிரத்து 382 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.2.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2020) நடந்த விபத்துகள், குற்றங்கள் மற்றும் வழக்குப்பதிவுகள் குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த 9 வழிப்பறிக் குற்றங்களில் 8 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. பெருங்குற்ற திருட்டு வழக்குகளில் 82 சதவீதம் வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.45.57லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், கால்நடைத் திருட்டு உள்ளிட்ட 292 வழக்குகளில், 225 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாவட்ட அளவில் நடந்த 39 கொலைக்குற்றங்களில் 38 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் கடந்த ஆண்டு 637 பேர் காணாமல் போன நிலையில், 533 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 242 பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நடந்த 133 சாலை விபத்துகளில், 154 பேர் இறந்துள்ளனர். சாலை விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 7 லட்சத்து 89 ஆயிரத்து 382 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.2.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்து ஏற்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு உரிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்