எத்தனை முனைப்போட்டி இருந்தாலும் திமுக கூட்டணிக்குத்தான் வெற்றி கே.என்.நேரு உறுதி

By செய்திப்பிரிவு

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட் டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்எல்ஏ பங்கேற்றார்.

கூட்டத்துக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தஞ்சாவூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் இறைவனின் ரேஷன் கார்டுக்குரிய பொங்கல் சிறப்புத் தொகுப்பை வாங்காம லேயே வாங்கியதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந் துள்ளது. இதுபோன்று எத்தனை பேரின் பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை.

திமுக இளைஞரணிச் செயலா ளர் உதயநிதி செல்லும் இடங்களில் அதிக அளவில் மக்கள் திரண்டு வரவேற்பு அளிக்கின்றனர். அத னால், முதல்வர் அவரை கடுமை யாக விமர்சித்து பேசி வருகிறார்.

தேர்தல் வரவுள்ளதால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே யார் பெரியவர் என போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால் பத்திரிகைகளில் மாறி மாறி விளம்பரம் கொடுத்து வருகின்றனர். ஆனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந் தாலும் அது திமுகவுக்கு தான் சாதகமாக அமையும் என்றார்.

கூட்டத்தில், திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைர மணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்