வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சி, காரைக்காலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 130 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விவசாயிகளின் விரோதி மோடி என்ற தலைப்பில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நாடு முழுவதும் டிச.26 முதல் ஜன.5-ம் தேதி வரை தெருமுனைக் கூட்டம், துண்டுப் பிரசுரம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. போராட்ட இயக்கத்தின் கடைசி நாளான நேற்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவர் ஹசன் தலைமையில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிடுவ தற்காக ஊர்வலமாகச் சென்ற மாவட்ட துணைத் தலைவர் பிச்சைகனி, மாவட்ட பொதுச் செயலாளர் நியமத்துல்லா, மாவட்டச் செயலாளர் முபாரக், மாவட்டப் பொருளாளர் காதர் உட்பட 70-க்கும் அதிகமானோரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு நேரிட்டது. இதனால், எஸ்டிபிஐ கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மத்திய அரசைக் கண் டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதே கோரிக்கையை வலி யுறுத்தி பெரம்பலூர் அருகேயுள்ள திருமாந்துறை சுங்கச் சாவடியை எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் முஹம்மதுரபிக், மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் கனி, துணைத் தலைவர் முஹம்மது பாருக், மாவட்டச் செயலாளர் ஷாஜஹான் உட்பட பலர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, காரைக்கால் தலைமை அஞ்சல் நிலைய அலு வலக வளாகத்தில் உள்ள பாஸ் போர்ட் அலுவலகத்தை முற்றுகை யிடுவதற்காக எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் முகமதுபிலால் தலைமையில் சென்ற புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் மு.தமீம்கனி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவர் பதுருதீன், செயலாளர் அப்துல் மஜீத் உட்பட 60-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago