தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சென்னையில் நாளை (இன்று) காத்திருப்புப் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அனுமதி கேட்டிருந்த நிலையில், மாநகரக் காவல் துறை யினர் கடந்த ஒரு வாரமாக அனு மதி கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். ஒருவேளை தடை விதித்தாலும் தடையை மீறி போராட்டம் நடைபெறும்.
கரோனா பொது முடக்கம் காரண மாக தமிழகத்தில் அமலிலில் இருக்கும் 144 தடை உத்தரவு, ஜனநாயக முறைப்படியான போராட்டங்களுக்கு தடையாக உள்ளது. எனவே, இந்த தடை உத்தரவை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
மத்திய பாஜக அரசு, வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகளை கையில் வைத்துக் கொண்டு திரைத்துறையினரையும், விளையாட்டுத் துறையினரையும் தங்கள் கட்சியில் சேர வற்புறுத்தியும், அல்லது தனிக் கட்சி தொடங்க நிர்பந்தித்தும் வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற முயற்சி தோல்வியடைந்திருக்கிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago