கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக புளியரையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் அதன் எல்லையையொட்டி உள்ள புளியரையில் கால்நடை பராமரிப்புத் துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், புளியரை யில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் நேற்று தொடங்கப்பட்டது.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து தமிழக எல்லைக்குள் அனுமதிக்கின்றனர்.

ஒரு கால்நடை மருத்துவர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தினமும் 3 ஷிப்ட்கள் வீதம் 24 மணி நேரமும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கால்நடை மருத் துவர் ஜெயபால்ராஜ் கூறும்போது, “கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் வாத்து களுக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்துக்குள் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஜனவரி 5-ம் தேதி (நேற்று) தொடங்கி 90 நாட்கள் புளியரையில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெறும்.

கேரளாவில் இருந்து வாத்து, கோழி, பறவைக் கழிவுகள், முட்டைகள் கொண்டு வரும் வாகனங்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படாமல் மீண்டும் கேரளாவுக்கே திருப்பி விடப்படுகின்றன.

மற்ற வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளித்து அனுப்பப்படுகின்றன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்