திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலியில் சாலை களில் மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் நேரிட்டு வருவது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கவும், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாநகராட்சியில் மேலப்பாளையம், பாளையங் கோட்டை மண்டலங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். மேலப்பாளையம் மண்டலத்தில் 13 மாடுகளும், பாளையங்கோட்டை மண்டலத்தில் 2 மாடுகளும் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மண்டலத்தில் 41-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளில் லார்வா கொசுப்புழு இருக்கிறதா என்று வீடுவீடாக டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago