புத்தகம் படிக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்தகம் படிக்கும் நேரமே நாம் உயிருடன் உலாவும் நேரமாக அறிஞர் பெருமக்களால் கருதப்படுகிறது என்று திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்தார்.
தமிழக அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம் ,வாசகர் வட்டம் ,தேசிய வாசிப்பு இயக்கம் ஆகியவை இணைந்து புத்தகங்களோடு புத்தாண்டு என்ற 4 நாட்கள் சிறப்பு நிகழ்வை நடத்தின. இதன் நிறைவு விழா மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இதையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் பேசியதாவது:
புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்தகம் வாசிக்கும் நேரம் மட்டுமே நாம் உயிரோடு உலாவும் நேரமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. எனவே, தினமும் வாசிக்க வேண்டும். நெல்லையில் நடைபெற்ற கடந்த புத்தகத் திருவிழாவில் 12 புத்தகங்கள் வாங்கினேன். மாதத்துக்கு ஒரு புத்தகம் வீதம் இதுவரை 10 புத்தகங்களைப் படித்து முடித்து விட்டேன். இந்தப் புத்தாண்டில் இருந்தாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது அந்த திறமை எது என அறிந்து அதை வெளிக்கொணர இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்
வாசகர் வட்டத் தலைவர் மரியசூசை தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன் முன்னிலை வகித்தார். ‘இலக்கியம் காட்டும் வாழ்வியல்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சவுந்தர மகாதேவன் தலைமை வகித்தார். பெரும்புலவர் இளங்கோ, பேராசிரியர்கள் அந்தோணிராஜ், ஜெயமேரி, ஹரிஹரன், முனைவர் சரவணகுமார், ஜெயந்தி மாலா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
450 திருக்குறளைக் கொண்டு 5 அடி உயரத்தில் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந் சிவராம் கலைக்கூட வளரும் சாதனையாளர் பவிஷ்யாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் தம்பான், நூலகர் அகிலன் முத்துக்குமார், புலவர் வை. ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட மைய நூலகர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago