வேலூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் வாயிலாக இளம் வாக்காளர்களை அதிகம் சேர்த்து முதலிடம் வாக்காளர் பட்டியல் ஆய்வு கூட்டத்தில் பாராட்டு

By செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் மாநில அளவில் இளம் வாக்காளர்களை அதிகம் சேர்த்து வேலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வாக் காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் கடந்த மாதம் 15-ம் தேதியுடன் நிறைவுப் பெற்றது. இதில், புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் என 57 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஷோபனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வருவாய் கோட்டாட்சியர்கள் கணேஷ் (வேலூர்), ஷேக் மன்சூர் (குடியாத்தம்), தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராம் மற்றும் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழக அளவில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை அதிகளவில் சேர்த்த மாவட்டமாக முதலிடத்தில் வேலூர் இருப்பதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இளம் வாக்காளர்களை அதிகளவில் பெயர் சேர்க்கும் பணியை துரிதப் படுத்தவும் ஆய்வு செய்யப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி 2021-ம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்பான திட்டமிடல் ஆய்வு செய்யப்பட்டது. மக்கள் தொகையின்அடிப்படையில் வாக்காளர்களின் எண் ணிக்கை 70 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அந்த வகையில், வேலூர் மாவட் டத்தில் 71 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் வேலூர் தொகுதியில் மட்டும் 67 சதவீதமாகவும் மற்ற தொகுதிகளில் 70 சதவீத்துக்கு அதிகமாகவும் உள்ளது. வேலூர் தொகுதியில் மட்டும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு வாக்காளர்களிடம் ஆர்வம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. வேலூரில் புதிய வாக்காளர் சேர்க்கை தொடர்பாக கூடுதல் அக்கறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2021 மக்கள் தொகையின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் 38 ஆயிரம் பேராக இருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 7 ஆயிரம் பேரும் டிசம்பர் மாதம் 15-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் மூலம் 15 ஆயிரம் பேர் என மொத்தம் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இது மாநில அளவில் முதலிட மாக இருந்தாலும், இறுதி வாக்கா ளர் பட்டியல் வெளியான பிறகு சிறப்பு முகாம்கள் மூலம் இளம் வாக் காளர்களின் எண்ணிக் கையை அதிகரிக்க ஆட்சியர் ஏற்பாடுகளை செய்துள்ளார்’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்