எலவனாசூர்கோட்டையில் தரமற்ற முறையில் குழாய் அமைத்ததால் குடிநீர் விநியோகத்தில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டில் குடிநீர் வரி செலுத்தப் போவதில்லை என அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டையில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் குழாய் அமைத்துள்ளது. அந்த வகையில் கீழப்பாளையம் கிரா மத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒப்பந்ததாரர் குழாயை தரையில் புதைக்காமல் திறந்த வெளியில் அமைத்துள்ளார். இதில் ஒரு குழாயில் தண்ணீர் அதிகமாகவும், மற்றொரு குழாயில் தண்ணீர் குறைவாகவும் வந்தது. இதனால் குடியிருப்பு வாசிகளிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
மேலும் குழாய் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளதால், மாடுகள் நடந்து சென்றாலும் உடைந்துவிடும் நிலை உள்ளது. பொது தெருக்குழாய் சிலநபர்களின் தூண்டுதலின் பேரில் அடிக்கடி சேதப்படுத்தப்படுகிறது. மற்றப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் செல்லாதவாறு தடை செய்யப் படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கிராம மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
முறையாக குடிநீர் வழங் காததால் குடிநீர் வரியை செலுத்தப்போவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago