கடலூர் மாவட்டத்தில் ரூ.190.79 கோடிக்கு ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
கடலூரில் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 2,500 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை ஆகியவற்றை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித் ததாவது.
முதல்வர் பழனிசாமி, அனை வரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டுஅரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பாக பச்சரிசி 1 கிலோ,சர்க்கரை 1 கிலோ,முந்திரி 20 கிராம், திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஒரு முழு நீள கரும்பு, ஒரு துணிப் பை மற்றும் ரொக்கம் ரூ.2,500 வழங்கிட உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,420 பொது விநியோக திட்ட நியாயவிலை கடைகள் மூலம் 7 லட்சத்து 34 ஆயிரத்து 356 குடும்ப அட்டை தாரர்களுக்குவழங்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் ரூ.190.79கோடி செலவில் இது செயல்படுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் வரும் 12-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். விடுபட்ட அட்டைதாரர்கள் வரும் 13-ம் தேதி பெற்றுக்கொள்ளலாம்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்கி டவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 59 ஆயிரத்து 411 சேலைகள், 6 லட்சத்து 56 ஆயிரத்து 886 வேட்டிகள் வழங்கப்பட உள்ளன. தமிழர்திருநாளாம் பொங்கல் பண்டிகையை குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பினை பெற்று மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்றார். மாவட்ட வருவாய்அலுவலர் அருண் சத்தியா, மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இளஞ் செல்வி, மாவட்ட வழங்கல் அலு வலர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1,420 பொது விநியோக திட்ட நியாயவிலை கடைகள் மூலம் 7 லட்சத்து 34 ஆயிரத்து 356 குடும்ப அட்டை தாரர்களுக்குவழங்கப்படும். 12-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago