அதிமுக கூட்டணியில் தான் பாஜக இடம்பெற்றுள்ளது மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேச்சு

By செய்திப்பிரிவு

அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக முதல்வரே தெளிவாக கூறியுள்ளார், என மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் முன்னிலை வகித்தார். தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கரோனா ஊரடங்கால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் முதல்வர் பழனிசாமி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 ரொகத்துடன் பொங்கல் தொகுப்பை வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனை அரசியல் லாபத்திற்காக சிலர் கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களை விட்டு பொதுமக்கள் விலகிவிடுவார்கள்.

அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக முதல்வரே தெளிவாக கூறியுள்ளார். அவரவர்கள் தங்கள் கட்சியை வளர்ப்பதற்காக சொந்தக் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

அதிமுக ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. கோவையில் திமுக நடத்திய மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஒரு பெண் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்