பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு ‘டேப்’ அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

By செய்திப்பிரிவு

பள்ளிகள் திறந்தவுடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘டேப்’ வழங்கப்படும், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பள்ளிகள் திறந்தவுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘டேப்’ வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் நடைபெறும். அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கருத்துக்களை அறிந்தபின்பு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் முடிவு எடுக்க வேண்டும். அவர் எப்போது அறிவித்தாலும், பள்ளிகளைத் திறக்க தயார் நிலையில் வைத்துள்ளோம். மேலும், பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக் கேட்பு தொடங்கியுள்ளது.

மாணவர்கள் இடைவெளி விட்டு அமரும் வகையில் வகுப்பறைகள் சரி செய்து வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப் படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்