கரூர் மாவட்டம் குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மானிடம், குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், குளித்தலையில் தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே நிற்கும் வகையில் உள்ளது. இதனால் பேருந்துகள் பேருந்து நிலையத்தின் உள்ளே வராமல், வெளியிலேயே பயணிகளை இறக்கி, ஏற்றி வருகின்றன.
மேலும், பயணிகள் ஒதுங்கி நிற்கக்கூட இடமின்றி கடை வாசல்களில் ஒதுங்கி நிற்கின்றனர். எனவே, தற்போதுள்ள பேருந்து நிலைய இடத்திலேயே அனைத்து வசதிகளும் கொண்ட நவீன பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த இடத்தில் போதிய இடவசதியில்லை என்றால், புதிய இடத்தைத் தேர்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago