துவரங்குறிச்சி அருகே தெத்தூரில் பாலாற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை

By செய்திப்பிரிவு

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் துவரங்குறிச்சி அருகே தெத்தூரில் பாலாற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலை பகுதிகளில் தொடங்கி திருச்சி மாவட்டத்தின் தெற்கு எல்லையோர கிராமங்கள் வழியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதி வரை பாலாறு ஓடுகிறது. மழைக் காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். மற்ற நாட்களில் பெரும்பாலும் வறண்டு காணப்படும். இதனால் திருச்சி மாவட்டத்தில் இந்த ஆற்றின் கரையோரங்களில் வசிக்கக்கூடிய விவசாயிகளுக்கு, இந்த ஆற்றின் மூலம் பெரியளவில் பயனின்றி இருந்தது.

இதையடுத்து, மழைக் காலங் களில் வரக்கூடிய நீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, அருகிலுள்ள கிராமங் களின் கிணற்றுப் பாசனத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை மூலம் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள தெத் தூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.4 கோடி செலவில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிக ளுக்கான ஒப்பந்தம் தற்போது கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பாலாற்றின் குறுக்கே தெத்தூர் பகுதியில் 50 மீட்டர் அகலத்தில் 1.7 மீட்டர் உயரத்தில் இந்த தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதால், இப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கிவிடும். இந்தாண்டு இறுதிக்குள் பணி கள் நிறைவுபெறும் என எதிர் பார்க்கிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்