புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற் போது ஆழ்துளை கிணற்று தண் ணீரைக் கொண்டு சாகுபடி செய் யப்பட்ட பகுதியில் நெல் அறுவ டைக்கு தயார் நிலையில் உள்ளது.

நெடுவாசல், கறம்பக்குடி உள்ளிட்ட இடங்களில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, தாமதமின்றி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுசாமி கூறியபோது, “வழக்கமாக ஜனவரி தொடக்கத் திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். ஆனால், நிகழாண்டில்தான் தாமதமாகிறது. தற்போது நெல் அறுவடைப் பணி நடைபெற்று வருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கே.முருகன் கூறியதாவது, “முதல் கட்டமாக கலியராயன்விடுதி, புதுப் பட்டி, விளாத்துப்பட்டி, களமா வூர் சத்திரம், தென்னதிரையன் பட்டி, தாஞ்சூர், அரசர்குளம், அம்புக்கோவில், விளாப்பட்டி, செங்கம்மேடு, பள்ளத்துப்பட்டி, துவரவயல் ஆகிய 12 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் ஓரிரு நாட்களில் திறக் கப்படும். அடுத்த ஒரு வாரத்துக் குள் தேவைக்கு ஏற்ப மாவட்டம் முழுவதும் திறக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்