திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 11 மி.மீ.மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்திலுள்ள பிறஅணைப் பகுதிகள் மற்றும் இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
சேர்வலாறு- 5, மணிமுத்தாறு- 3.6,அம்பாசமுத்திரம்- 1, சேரன்மகாதேவி- 3.20,நாங்குநேரி- 3, ராதாபுரம்- 3, பாளையங் கோட்டை- 3.
சுமார் 143 அடி உச்சநீர்மட்டம் கொண்டபாபநாசம் அணை நீர்மட்டம் 142.55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,309 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்டசேர்வலாறு அணையில் நீர்மட்டம் 144.42அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணி முத்தாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.
நீர்மட்டம் நேற்று காலையில் 113 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,098 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து 475 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 49 அடி உச்சநீர்மட்டம் கொண்டவடக்குபச்சையாறு அணையில் நீர்மட்டம்29 அடியாகவும், 22.96 அடி உயரம் கொண்டநம்பியாறு அணையில் நீர்மட்டம் 10.62 அடியாகவும், 52.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 26 அடியாகவும் இருந்தது.
குற்றாலம் அருவிகளில் வெள்ளம்
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago