திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தனி துணை ஆட்சியர் அப்துல்முனீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நிலப்பட்டா, இலவச மின் இணைப்பு, கல்விக் கடன், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்களை பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் வழங்கினர்.
திருப்பத்தூர் மாவட்டம் லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜங்குமன்(80) என்பவர் அளித்த மனுவில், ‘‘எனக்கு சொந்தமான விவசாய நிலம் 2.50 ஏக்கர் லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு எனது மனைவி உயிரிழந்ததை தொடர்ந்து, எனது மகன் வடிவேலு வற்புறுத்தலின்பேரில் 2.50 ஏக்கர் விவசாய நிலத்தை அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்தேன்.
இந்நிலையில், நிலம் பத்திரப் பதிவு செய்து கொடுத்த பிறகு எனது மகன் என்னை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு அடித்து துன்புறுத்துகிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என்னை ஏமாற்றி எழுதி வாங்கிய நிலத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என குறிப் பிட்டிருந்தார்.
திருப்பத்தூர் அடுத்த உடையாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா, முருகம்மாள், ஆறுமுகம், தண்டபாணி, சங்கரி, சிவானந்தம் ஆகியோர் அளித்த மனுவில், ‘‘உடையாமுத்தூர் கிராமத்தில் எங்களுக்கு பதியப் பட்ட 1.40 சென்ட் நிலத்தை கடந்த 1998-ம் ஆண்டு பெரியார் நினைவு சமுத்துவபுரம் அமைக்க அரசு அதிகாரிகள் கையகப்படுத்தினர். அதற்கான இழப்பீடு தொகை எங்களுக்கு இதுநாள் வரை வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
எனவே, எங்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடி யாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago