தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுக் குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தமிழ் செல்வன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் உதயபானு பேசியதாவது:
டாஸ்மாக் கடைகளில் பணி யாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர் கள் ஆகியோர் 480 நாட்கள் பணி முடித்து இருந்தால் அவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவன ஊழியர் களுக்கு வழங்கப்படுவதுபோல் டாஸ்மாக் பணியாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும்.
லட்சக் கணக்கில் வரவு, செலவு செய்யும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விற்பனை நிலையங்களில் வசூலான தொகையை வங்கியில் செலுத்துவதற்கு பாது காப்பான வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 8 மணி நேர பணியை வழங்க வேண்டும். அதற்கு மேல் பணியாற்றினால் மிகைப்படி வழங்க வேண்டும். இந்தகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசி டமும், துறை அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எவ்வித நட வடிக்கையும் இல்லை.
இதனால் எங்களுடைய சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். ஏற்கெனவே நீதிமன்றம் மூலம் பல்வேறு சலுகைகளை அரசிடமிருந்து பெற்று உள்ளோம். அதன்படி மீதமுள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு போராடுவோம், என்றார். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago