அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா சார்பில், கொங்கு மண்டல நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஈரோட்டில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா, மாநில துணைத் தலைவர்கள் கோவைத்தங்கம், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திர சேகர், மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக ஜி.கே.வாசன் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலுக் கான ஆயத்தப்பணிகளைத் தொடங்குவதற்கு தமாகா சார்பில் மண்டலக் கூட்டங்களைத் தொடங்கியுள்ளோம். தென் மண்டலக் கூட்டத்தை தொடர்ந்து கொங்கு மண்டலக் கூட்டம் நடந்துள்ளது. நாளை திருச்சியில் டெல்டா மண்டலக் கூட்டம் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுடைய வெற்றிவாய்ப்பை உறுதி செய்து கொள்வதே இந்த கூட்டங்களின் நோக்கமாகும்.
மண்டலக் கூட்டங்களில் எந்தெந்த பகுதியில் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தலில் நிற்கக்கூடிய வாய்ப்பு, அவரது செல்வாக்கு, இயக்கத்தின் பணிகளைத் தெரிந்து, அந்தந்த தொகுதிகளின் மீது அதிக கவனம் செலுத்தி, அடித்தளப் பணியைத் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளோம், என்றார்.
திமுகவின் மக்கள் சபை தேவையற்றது
ஈரோட்டில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அதிமுக அரசு மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஆட்சியாக உள்ளது. ஆனால், திமுக கூட்டணி ஆளுங்கட்சிக்கு மட்டுமல்லாது, வாக்காளர் களுக்கும் எதிரிக்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. கிராமசபைக் கூட்டத்தை திமுக அரசியல் சபையாக, மாற்றுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களை அங்கே கட்டாயப்படுத்தி உட்கார வைத்தாலும் கூட, பொழுதுபோக்காக உட்கார்ந்து கொண்டு திரும்பி வந்து விடுவார்கள். அது தேவை யற்ற ஒன்று.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago