ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்க செங்கரும்பு கொள்முதல் தீவிரம்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற் காக செங்கரும்பு கொள்முதல் செய்யும் பணியில் அரசு அலு வலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிகழாண்டில் பொங்கல் பண்டிகைக்கு அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுநீள செங்கரும்பு ஒன்று, தலா 20 கிராம் உலர் திராட்சை, முந்திரி பருப்பு, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, திருச்சி மாவட்டத் தில் 8 லட்சம் ரேஷன்கார்டு தாரர்களுக்கு 1,224 ரேஷன் கடைகள் மூலம் இன்று(ஜன.4) முதல் ஜன.13-ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இதையொட்டி, விவசாயிகளிட மிருந்து செங்கரும்புகளைக் கொள்முதல் செய்து, அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் கொண்டையம்பேட்டை, பொன்னு ரங்கபுரம், திருவளர்ச்சோலை, மணப்பாறை பாலக்குறிச்சி, நொச்சியம், துடையூர் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயி களிடமிருந்து இடைத்தரகர் இன்றி அரசு அலுவலர்களே நேரடியாக 8 லட்சம் செங்கரும்புகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “காவிரியில் தண் ணீர் வரத்து போதுமானதாக இருந் ததால் செங்கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 17,000 முதல் 20,000 வரை செங்கரும்புகள் விளைந்துள்ளன. ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகியுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டில் தனியார் வியாபாரிகள் செங்கரும்பு கொள்முதல் செய்ய இதுவரை ஆர்வம் காட்டவில்லை. ரேஷன் கடைகள் மூலம் முழுநீள கரும்பை அரசு வழங்கவுள்ளதால், விற் பனையாகாமல் போய்விடுமோ என்று வியாபாரிகள் தயங்குவதாக கருதுகிறோம். பொங்கலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் இனிமேல் வந்து வாங்கிச் செல்லவும் வாய்ப்புள்ளது. எங்களைப் பொறுத்தவரை செலவு செய்ததற்கேற்ப நல்ல விலை கிடைத்தால்தான் எங்களுக்குப் பொங்கல் இனிக்கும்’’ என்றனர்.

இதுகுறித்து கூட்டுறவு, வழங்கல் துறை அலுவலர்கள் கூறும்போது, “விவசாயிகளி டமிருந்து தரத்துக்கேற்ப ஒரு செங்கரும்பு அதிகபட்சம் ரூ.21 வரை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கான தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்