அதிமுக அமைச்சர்களின் 2-வது ஊழல் பட்டியலும் தயாராகிவிட் டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் திமுகவின் மக்கள் கிராம சபைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட் டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் பங்கேற்றுப் பேசியது:
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அடுத்து அமை யப் போவது திமுக ஆட்சி தான். அப்போது ஜெயலலிதா மரணத் துக்கு காரணமான குற்றவாளியை மக்கள் முன் நிறுத்தி சட்டரீதி யான தண்டனையை வாங்கித் தருவோம். நான் முதல்வரானதும் முதல் வேலை இதுதான்.
3 வேளாண் சட்டங்களை அனைத்து முதல்வர்களும் எதிர்க் கின்றனர். ஆனால், விவசாயி எனக் கூறி கொள்ளும் முதல்வர் பழனி சாமி ஆதரிக்கிறார். மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயகுமார், வேலு மணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது ஆளுநரிடம் ஊழல் புகார் கொடுத்துள்ளோம். அப்போதே 2-வது பட்டியல் அளிப் போம் என்றோம். அது இப்போது தயாராகிவிட்டது.
இந்தப் பட்டியலில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடம் பெறுவார். வாகனங்களுக்கு எஃப்சி எடுப் பதில், வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிப்பட்டைகள், ஜிபிஎஸ் கருவிகளுக்கு அனுமதி கொடுப் பதில் என கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது. மேலும், கரூர் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் இடம், பெட்ரோல் பங்க், ப்ளூமெட்டல் என வாங்கி குவித்து வருகிறார்.
தேர்தலில் முதல்வர், அமைச் சர்கள் வெற்றி பெற மாட்டார்கள். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஒப்பந்தங்களை தனது உறவினர்களுக்கு வழங்கி முதல்வர் பழனிசாமியை விட அதிகம் சம்பாதிக்கிறார்.
இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், குளித்தலை எம்எல்ஏ ராமர் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் வழியிலும், கூட்டம் முடிந்து திருச்சி செல்லும் வழியிலும் என கரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago