பள்ளிகொண்டா அருகே ரூ.7.50 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பறிமுதல் 2 இளைஞர்கள் கைது

By செய்திப்பிரிவு

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேலூர் வழியாக கடத்த முயன்ற போதைப் பொருட் களை காவல் துறையினர் பறி முதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங் களூருவில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப் பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், மாவா, ஹான்ஸ், பான்மசாலா மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுகிறது.

இதைத்தடுக்க பள்ளிகொண்டா சோதனைச்சாவடி அருகே பள்ளிகொண்டா காவல் துறை யினர் 24 மணி நேரமும் கண் காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடி அருகே காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனை யிட்டனர்.

அதில், தடை செய்யப்பட்ட பான்மசாலா, ஹான்ஸ், குட்கா போன்ற போதைப்பொருட்கள் சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7.50 லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து, போதைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் பெங்க ளூருவைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ராஜேஷ்கண்ணா(36), சென்னையைச் சேர்ந்த லோகேஷ்(25) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்