மனிதனின் அன்புக்கு எல்லைகள் உண்டு தெய்வத்தின் அன்புக்கு எல்லைகள் கிடையாது ஜெயந்தி விழாவில்  சக்தி அம்மா அருளுரை

By செய்திப்பிரிவு

மனிதனின் அன்புக்கு எல்லைகள் உண்டு, ஆனால் தெய்வத்தின் அன்புக்கு எல்லைகளே கிடையாது என்பதால் ஆன்மிகத்தை அனை வரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என  சக்தி அம்மா தெரிவித்தார்.

வேலூர் அடுத்த அரியூர்  நாராயணி பீடம்,  புரம் பொற்கோயிலை நிறுவிய  சக்தி அம்மாவின் 45-வது ஜெயந்தி விழா  நாராயணி பீடத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கடந்த டிசம்பர் 14-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை  நாராயணி பீடத்தில் கணபதி யாகம், சரஸ்வதி யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

ஜனவரி 1-ம் தேதி  லட்சுமி நாராயணி கோயில் மற்றும்  புரம்  நிவாசப்பொருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.  சக்தி அம்மாவின் 45-வது ஜெயந்தி விழாவையொட்டி பல்வேறு கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் நேற்று முன்தினம்  சக்தி அம்மாவிடம் வழங்கப்பட்டது.

 சக்தி அம்மாவின் ஜெயந்தி விழாவையொட்டி  நாராயணி பீடத்தில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி யாகம், சரஸ்வதி யாகம், ஆயுஷ்யாகம்,  நாராயணியாகம், பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

இதையடுத்து, காலை 10 மணியளவில் பல்வேறு மாவட் டங்களில் இருந்து  நாராயணி பக்த சபா சார்பில் வரிசை தட்டுகளுடன் கரகாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், குதிரை, யானை களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட வண்ண, வண்ண மலர்கள்  சக்தி அம்மாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. முன்னதாக பாதபூஜையும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, குழந்தை கள் முன்னிலையில்,  சக்தி அம்மா ‘கேக்’ வெட்டினார். பின்னர், அவர் பேசும்போது, ‘‘ஒரு குழந்தை தனது அம்மாவிடம் பாசத்தை கற்றுக்கொள்கிறது, அப்பாவிடம் அறிவையும், குருவிடம் ஞானத் தையும் கற்றுக்கொள்கிறது. ஆனால், தெய்வத்திடம் மட்டுமே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. தெய்வம் மீது பக்தி செலுத்தினால், தெய்வம் நம் மீது அன்பு செலுத்தும், அதன் மூலம் எல்லா சக்தியும் நமக்கும் கிடைக்கும்.

மனிதப் பிறவி என்பது மிகப் பெரிய பொக்கிஷம், அதிலும் எந்தவித குறையும் இல்லாமல் பிறந்தால் மிகப்பெரிய வரம். அதை விட பெரிய வரம் தெய்வத்தின் மீது நாம் செலுத்தும் அன்பு. நம் மனதில் அன்பு இல்லாமல் போனால், நமக்கு தெய்வத்தின் சக்தி இல்லாமல் போகும்.

மனிதனுக்கு பக்தி வரும்போது தான் ஒழுக்கம், கட்டுப்பாடு, அமைதி, சந்தோஷம், சக்தி ஆகியவை தேடி வரும். வீடு, வாசல், சொத்து இவையெல்லாம் மனித வாழ்வில் வரும், போகும். ஆனால், பக்தி மட்டுமே வாழ் நாள் முழுவதும் நம்முடன் வரும். எனவே, ஆன்மிகத்தை நாம் தேடிச்செல்ல வேண்டும்.

மனிதர்களின் அன்புக்கு எல்லைகள் உண்டு, ஆனால் தெய்வதின் அன்புக்கு எல்லை களே கிடையாது என்பதால், ஆன்மிகத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’. என்றார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம்பர்கேஷ், ஆந்திர மாநில அமைச்சர் ராம கிருஷ்ணாரெட்டி, கலவை சச்சி தானந்தசுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ் வரசுவாமி, வாலாஜா தன்வந்திரிபீட முரளிதரசுவாமிகள், முன்னாள் மத்திய இணையமைச்சர் என்.டி.சண்முகம், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன்,  புரம் இயக்குநர் சுரேஷ்பாபு,  நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர். பாலாஜி,  புரம் மேலாளர் சம்பத், அறங்காவலர் சவுந்திரராரஜன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்