விதை மஞ்சள் ஏற்றுமதியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தேசிய செயலாளர் கே.எம்.ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு உணவு மஞ்சள் ஏற்றுமதிக்கு தடை விதித்து, விதை மஞ்சளை ஏற்றுமதி செய்வதால் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகிறோம். மஞ்சள் ஒரு மருத்துவப் பயிர் ஆகும். இதனால் உயிரினங்களுக்கு வரும் நோயில் 60 வகையான நோய்கள் தீர்க்கப்படுகின்றன. எனவே மஞ்சளை ஒரு அருமருந்தாக உணவில் சேர்க்கிறோம். இந்த பயிர் ஒரு முறை பயிரிட்டால் 7 ஆண்டுகள் தொடர்ந்து பயிரிட வேண்டும் என விவசாயிகள் விரும்புவார்கள். அப்போது தான் ஒரு வருடமாவது நல்ல விலை கிடைக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டலுக்கு ரூ.10 ஆயிரம் வரையில் விலை கிடைத்தது. கடந்த 3 ஆண்டுகளாக ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் மட்டுமே விலை கிடைக்கிறது.
இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் விரைவில் மஞ்சள் விவசாயத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை வந்து விடும். எனவே, மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு விதை மஞ்சள் ஏற்றுமதிக்கு தடை விதித்து உணவு மஞ்சள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அந்நிய செலாவணி கணிசமாக மத்திய அரசுக்கு கிடைக்கும்.
மஞ்சள் பயன்பாட்டால் 60 வகையான நோய்கள் தீர்க்கப்படுகின்றன. எனவே மஞ்சளை ஒரு அருமருந்தாக உணவில் சேர்க்கிறோம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago