பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.வெங்கட பிரியா வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகையை யொட்டி அனைத்து அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ.2,500 ரொக்கம் மற்றும் பொங் கல் பரிசுத் தொகுப்பு வழங்கப் பட உள்ளது.

இதுதொடர்பாக புகார்கள், குறைகள் இருப்பின், பெரம்பலூர் வட்டத்துக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (7338801267) மற்றும் பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலர் (9445000271) ஆகியோரையும், வேப்பந்தட்டை வட்டத்துக்கு தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் (9442134126) மற்றும் வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் (94450 00272) ஆகியோரையும், குன்னம் வட்டத் துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் (94446 16954) மற்றும் குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் (9445000273) ஆகியோரையும், ஆலத்தூர் வட்டத்துக்கு உதவி ஆணையர் கலால் (9647251147) மற்றும் ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் (9445796445) ஆகியோ ரையும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 94454 76298 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித் துள்ளார்.

இதேபோல, அரியலூர் மாவட் டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்கள் இருப்பின், வட்டார வழங்கல் அலுவலர்களை அரியலூர் வட்டத்துக்கு 94450 00274, உடையார்பாளையம் வட்டத்துக்கு 9445000275, செந்துறை வட்டத்துக்கு 94450 00276, ஆண்டிமடம் வட்டத்துக்கு 9095950353, கூட்டுறவு சார்பதிவா ளர்களை செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்துக்கு 9444527019, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டத்துக்கு 9443180786, தா.பழூர் வட்டத்துக்கு 9597870496, திருமானூர் வட்டத்துக்கு 9786605942, மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04329-228165 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் த.ரத்னா தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்