கரூர் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் இன்று திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் திமுக சார்பில் இன்று (ஜன.3) நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டா லின் பங்கேற்றுப் பேசுகிறார்.

கூட்டம் நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை திமுக மாவட்டப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ நேற்று பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கரூர் மாவட்ட திமுக சார்பில் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் ஜன.3-ம் தேதி(இன்று) நடைபெறும் மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் 15,000 பேர் பங்கேற்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் நொய்யல் குறுக்கு சாலை, திருகாம்புலியூர் ரவுண்டானா, கரூர் பேருந்து நிலையம், வெங்கமேடு, மண்மங் கலம் பேருந்து நிறுத்தம், வாங்கல் குப்புச்சிபாளையம், கரூர் ஐந்து ரோடு, திருமாநிலையூர், காந்திகிராமம், புலியூர், கிருஷ்ண ராயபுரம், குளித்தலை ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் படுகிறது. இவற்றில் 50,000 பேர் பங்கேற்கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றி போல, சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெறும். முதல்வரும், அமைச்சர்களும் தோற்கப்போவது உறுதி. ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிமுகவினர், திமுக வுக்கு பல்வேறு வழிகளில் இடையூறு அளிக்கின்றனர்.

திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் ஆகி யவற்றுக்கு அனுமதி மறுக்கப் படுகிறது. எல்லை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்றார்.

பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏ காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE