கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க நடவடிக்கை மதுரை கோட்ட மேலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் நிறுத்தப் பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் தெரிவித்தார்.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் பொதுமேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தவகையில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் உள்ளிட்ட மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வரும் 27-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதற்கு முன்னோட்டமாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், செங்கோட்டை ரயில் நிலையங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், நடைமேடை உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மதுரை கோட்டத்தில் நடை பெறும் இரட்டை ரயில் பாதை பணிகள் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவடையும். நிறுத்தப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பாவூர்சத்திரம், செங்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வரப்பெற்றுள்ளது. இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்