புதிதாக 51 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் தி.மலை மாவட்டங் களில் நேற்று 51 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,861-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,475 ஆகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 13 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,456-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர் கள் எண்ணிக்கை 19,169-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர் களில் 18,818 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 282 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்