விழுப்புரம் மாவட்டத்தில் புத்தாண் டையொட்டி நள்ளிரவில் தேவால யங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மாவட்டம் முழுவதும் நகர் பகுதிகளை போலீஸார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆங்காங்கு தடுப்பு அமைத்து மிதமான வேகத்தில் செல்லும்வகையில் பாதைகளை அமைத்தனர். கோயில்கள், தேவாலயங்கள் செல்லும் பகுதிகளில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர்ஆலயம், புனித சேவியர் ஆலயம்,டி.எல்.சி தேவாலயம், கிழக்கு பாண்டி ரோடு சிஎஸ்ஐ தேவாலயம், பெந்தகொஸ்தே தேவாலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் பங்கேற்றவர்களுக்கு பங்குத்தந்தைகள் ஆசியுரை வழங்கினார்கள்.
இதே போல விக்கிரவாண்டி அன்னை சகாயமாதா ஆலயம், அணிலாடியில் உள்ள புனித ஜோசப் ஆலயம், வேலந்தாங்கலில் உள்ள தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தேவாலயங்களில் நள்ளிரவு 12 மணிக்கு ஆலய மணி ஒலிக்கப்பட்டது. அப்போது வாணவேடிக்கையுடன் வெடி வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் அருகே எஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் விழுப்புரம் நகர போலீஸார் புத்தாண்டை வரவேற்று கேக் வெட்டி போலீஸார் , பொதுமக்கள் அனைவருக்கும் அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புத்தாண்டையொட்டி வீரவாழி அம்மன் கோயிலில் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. செஞ்சி கோட்டையில் உள்ள வீரஆஞ்சநேயர் கோயில், சிங்கவரம் ரங்கநாதர் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வழிபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago