ஒரு நிறுவனம் தனது வாடிக்கை யாளர்களின் நம்பிக்கையைத் தக்க வைக்க தரம் மற்றும் சரியான நேரத்தில் வழங்கல் ஆகியவையே முக்கியமானது என திருச்சி பெல் பொது மேலாளர் டி.எஸ்.முரளி தெரிவித்தார்.
திருச்சி பெல் நிறுவனத்தில் பெல் நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியது: புதிய வளர்ச் சிப் பாதைகளில் பன்முக முனைப்புகளை முன்னெடுக்கவும், செலவினக் குறைப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றிலும் முழுமையான நடவடிக்கைகளை திருச்சி பெல் நிறுவனம் எடுத்து வருகிறது.
ஒரு நிறுவனம் தனது வாடிக்கை யாளர்களின் நம்பிக்கையைத் தக்க வைக்க பொருளின் தரம் மற்றும் சரியான நேரத்தில் வழங்கல் ஆகியவையே முக்கியமானது.
ஊழியர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்தி, பன்முக ஆற்றல் மிக்க பணிக்குழுவாகவும், முடிவு சார்ந்த மேலாண்மை கொண்டவர் களாகவும், பொறுப்பான தலை மைப் பண்பு கொண்டவர்களாக வும் உருவாக வேண்டும்.
திருச்சி பெல் ஊழியர்கள் தேவையேற்பட்ட நேரங்களில் எல்லாம் கடின உழைப்பை வழங்கி சவால்களை முறியடிக்க கைகோத்துள்ளனர். இந்த நிதி யாண்டின் இறுதிக்காலாண்டில் திருச்சி பிரிவு மற்ற பிரிவுகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் வண்ணம் ஊழியர்கள் அனைவரும் தங்களது உறுதியான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக டி.எஸ்.முரளி தலைமையில் ஊழியர்கள் பெல் நாள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago