தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஜன.5 முதல் 12 வரை இணைய வழியில் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முகாமுக்கு மாநில துணைத் தலைவரும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஏ.சுகுமாறன் தலைமை வகித்துப் பேசியது:

கரோனா பெருந்தொற்றால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. இந்த சூழலில் ஆசிரி யர்கள், மாணவர்களிடையே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைய வழியில் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடி நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க 4,100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களின் பங்கேற்பு அதிக அளவில் உள்ளது. மாவட்ட மாநாடு ஜன.5 முதல் 12-ம் தேதி வரையிலும், மாநில மாநாடு ஜன.21,22 தேதிகளிலும் இணைய வழியில் நடைபெறவுள்ளது என்றார்.

மாநாட்டின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் அருண் விவேக், அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அசோக், மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டின் மாநில கல்வி இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாநில கருத்தாளர்கள் எம்.சத்தியமூர்த்தி, சலாவுதீன் , காத்தவராயன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.முகமது பாதுஷா, ரிஷி சரவணன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

முகாமில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். முன்னதாக திருச்சி மாவட்ட அறிவியல் இயக்கச் செயலாளர் எம்.மணிகண்டன் வரவேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்