பெரம்பலூர் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூரில் அண்மை யில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் சந்திர சேகரன், பிரியா, ஜானகி, துரைராஜ், பன்னீர்செல்வம், ரூபினி, சின்னதம்பி, சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்டச் செயலா ளரும், குன்னம் எம்எல்ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்எல்ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிபெற மேற் கொள்ளவேண்டிய பணிகள் குறித்து விளக்கமளித்தனர்.
இதில், பூத் கமிட்டி பணியை விரைந்து செயல்படுத்துவது, அதிமுக அரசின் சாதனை திட்டங்களை வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் எடுத்துக் கூறுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாவட்ட நிர்வாகிகள் ராணி, ராஜேஸ்வரி, வீரபாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்,
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago