வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி; ஆட்சியர் வீடு வீடாக சென்று ஆய்வு

By செய்திப்பிரிவு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற்றபோது பெறப்பட்ட மனுக்களின் உண்மைத் தன்மை குறித்து பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குட்பட்ட நாரணமங்கலம் மற்றும் விஜய கோபாலபுரம் ஆகிய கிராமங்களில் வீடு வீடாகச் சென்று ஆட்சியர் ப. வெங்கடபிரியா நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் மூலம் பெயர் சேர்க்க 20,465 விண்ணப்பங்கள், பெயர் நீக்க 1,223 விண்ணப்பங்கள், பெயர் திருத்தம் செய்ய 4,905 விண்ணப்பங்கள், ஒரேதொகுதியில் வேறு வாக்கு சாவடி மையத்துக்கு மாறுதல் தொடர்பாக 1,612 விண்ணப் பங்கள் என மொத்தம் 28,205 விண் ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்