பெரம்பலூர் மாவட்டத்தில் டிசம்பர் 2020 முதல் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், நெல், நிலக்கடலை, கரும்பு, சின்ன வெங்காயம், மரவள்ளி மற்றும் தக்காளி ஆகிய பயிர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீடு செய்யலாம்.
சின்ன வெங்காயத்துக்கு 18.1.2021 தேதிக்குள்ளும், மக்காச்சோளம், நெல், நிலக்கடலை மற்றும் தக்காளி ஆகிய பயிர்களுக்கு 15.2.2021 தேதிக்குள்ளும், மரவள்ளி பயிருக்கு 1.3.2021 தேதிக்குள்ளும், கரும்பு பயிருக்கு 31.10.2021 தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் உரிய பிரீமியத் தொகையை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்துகொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago