சொரக்குடி வேலைவாய்ப்பு முகாம் தேதி மாற்றம்

By செய்திப்பிரிவு

திருவாரூர் அருகே சொரக்குடியில் அரசின் சார்பில் நடைபெறவிருந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் மழையின் காரணமாக ஜன.27-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் அருகே சொரக்குடியில் அரசின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.7-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

அமைச்சர் ஆய்வு

இந்நிலையில், சொரக்குடியில் நடைபெற்று வரும் வேலை வாய்ப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று பார்வை யிட்டார். ஆட்சியர் சாந்தா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

அப்போது, அடுத்த 2 நாட் களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள் ளது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தி னார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியது:

மழைபெய்து முகாம் நடக்க உள்ள இடங்கள் ஈரமாக இருப்ப தாலும், தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாலும் வேலை நாடி வரும் இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதில் சிரமம் ஏற்படும். எனவே, வேலைவாய்ப்பு முகாமை ஜன.27-ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்