மாவட்ட மைய நூலகத்தில் ‘புத்தகங்களோடு புத்தாண்டு’ கண்காட்சி

By செய்திப்பிரிவு

தமிழக அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், வாசகர்வட்டம் , தேசிய வாசிப்பு இயக்கம் ஆகியவை இணைந்து புத்தாண்டில் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு ‘புத்தகங்களோடு புத்தாண்டு’ சிறப்பு கண்காட்சியை மாவட்ட மையநூலகத்தில் நடத்தின.

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தொடங்கி வைத்தார். வாசகர் வட்டத் தலைவர் மரியசூசை தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் இரா . வயலட், நூலக கண்காணிப்பாளர் சங்கரன், நூலக ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், தேசிய வாசிப்பு இயக்க தலைவர்.சு.தம்பான் சிறப்புரை யாற்றினர்.

‘வாழ்வில் வெற்றியைத் தருவது அனுபவ அறிவா ? கல்வி அறிவா? என்ற தலைப்பில் வாசகர் வட்ட துணைத் தலைவர் கோ. கணபதி சுப்பிரமணியன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. கவிஞர் பாமணி தொடங்கி வைத்தார். ‘கல்வி அறிவே’ என்று பேராசிரியர்கள் ஜெயமேரி, அந்தோணிராஜ், கவிஞர் ஜெயந்திமாலா, கல்லூரி மாணவர் முத்தரசன் ஆகியோர் வாதிட்டனர். ‘அனுபவ அறிவே’ என்று கோமதி கிருஷ்ணமூர்த்தி, முனைவர் சரவணகுமார், சமூக ஆர்வலர் சு.முத்துசாமி, கல்லூரி மாணவி நந்தினி ஆகியோர் வாதிட்டனர். நூலகர் இரா முத்துலட்சுமி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்