பாலக்காடு - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

By செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி நகரங்களுக் கிடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

திருநெல்வேலி - பாலக்காடு சிறப்பு ரயில் (எண் 06791) வரும் 4-ம் தேதி முதல் திருநெல்வேலியிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு பாலக்காடு சென்று சேரும். இதுபோல் மறுமார்க்கத்தில் வரும் 5-ம் தேதி முதல் பாலக்காட்டில் இருந்து சிறப்பு ரயில் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பா சமுத்திரம், தென்காசி, கொல்லம், பெரிநாடு, சாஸ்தான்கோட்டை, கருநாகப்பள்ளி, ஓச்சிரா, காயன் குளம், மாவேலிகரா, செறிய நாடு, செங்கனூர், திருவல்லா, செங்கனாச்சேரி, கோட்டயம், குருப்பண்துறா, வைக்கம் ரோடு, பிரவம் ரோடு, முலன்றுருட்டி, திருப்புணிதுறா, எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், ஒட்டப்பாலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் நான்கு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-ம் தேதி முதல் திருநெல்வேலியிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு பாலக்காடு சென்று சேரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்