ஆஎங்கில புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில் 9 மாதங் களுக்குப் பிறகு அதிகளவிலான பொதுமக்கள் திரண்டனர். கோட்டை கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் கோட்டை மூடப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கோட்டைக்கு சென்று சுற்றிப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஊரடங்கு தளர்வு படிப்படியாக அறிவிக்கப் பட்ட நிலையில், கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் அரசு அருங் காட்சியகத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரம், கோட்டை கொத்தளம், மதிற்சுவர் பகுதியில் சுற்றிப் பார்க்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட வில்லை. இதனால், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் வேலூர் கோட்டை வெறிச்சோடியே காணப்பட்டது.
ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக சுற்றுலாத் தலங்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. அதனடிப்படையில், வேலூர் கோட்டைக்கு சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்றனர். ஆனால், கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத் திருந்து சுவாமி தரிசனம் செய்த னர். அதேபோல், அரசு அருங்காட் சியகத்திலும் சுற்றுலாப் பயணி களின் வருகை அதிகமாக இருந் தது. அதேபோல், வேலூர் கோட்டை யில் 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று குதிரை சவாரி களைகட்டியது. குதிரை சவாரியிலும், குதிரை பூட் டப்பட்ட வண்டிகளில் சென்று பொது மக்கள் மகிழ்ந்தனர். கோட்டைக்கு வெளியே உள்ள பூங்காவிலும் அதிகளவில் திரண்டனர்.
கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள பெரியார் பூங்கா, அமிர்தி வன உயிரியில் பூங்கா, சிங்கிரி கோயில், பாலமதி முருகன் கோயில், ரத்தினகிரி பாலமுருகன் கோயில், வள்ளிமலை முருகன் கோயில்களிலும் அதிகளவிலான கூட்டம் காணப்பட்டது.
அதேபோல், வேலூர் சிஎஸ்ஐ மத்திய தேவாலயம் உள்ளிட்ட ஏராளமான தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த் தனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன் புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பிந்து மாதவர் பெருமாள் கோயில், வடச்சேரி பெருமாள் கோயில், நாக நாதசுவாமி கோயில், கைலாச கிரிநாதர் கோயில், பெரிய ஆஞ்சநேயர் கோயில், ஜோலார்பேட்டை பெருமாள் கோயில், முனீஸ்வரர் கோயில், வாணியம் பாடி ஆதீஸ்வரர் அழகுபெருமாள் கோயில், நெக்குத்தி அடுத்த புற்று மாரியம்மன் கோயில், திருப்பத் தூர் தருமராஜா கோயில், வரதராஜபெருமாள் கோயில், செல்வ விநாயகர் கோயில், மாயப் பிள்ளையார் கோயில், திருப்பதி கெங்கையம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் நடைபெற்றன.ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை பின்பற்றி கோயில்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல, மாவட்டத்தில் உள்ள முக்கிய தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை, வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் எஸ்பி விஜயகுமார் தலைமையில், 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப் புப்பணிகளில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago