காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் அம்மனுக்கு தினந்தோறும் எண்ணெய், தண்ணீர், வாசனை திரவியர்கள் உள்ளிட்டவை அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படும். ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு நிகழ்வாக அபிஷேகத்தின்போது நெய் மற்றும் வெந்நீர் பயன்படுத்தப்பட்டது.
பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து காமாட்சி அம்மன் லட்சுமி, சரஸ்வதியுடன் காலையில் கோயிலை வலம் வந்தார். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலில் வழக்கமாக அம்மன் தரிசனத்துக்கு மட்டும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் புறப்பாடு நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago