அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிடும் ரஜினியின் அறிவிப்பை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரி வித்தார்.
தேனி அருகே பழனிசெட்டி பட்டியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.
ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் பேசியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கட்சித் தொடங்குவதைக் கைவிட்டுள்ளார். இதை நான் வரவேற்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடன் வாழப் பிரார்த்திக்கிறேன். தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ள நிலையில், நானும் விரைவில் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளேன்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டோம் என்றார். இந்த விழாவில் பிளஸ் 1 மாணவர்கள் 4,853 பேருக்கும், மாணவிகள் 5,592 பேருக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 10,954 பேருக்கு ரூ.4.51 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத், கம்பம் எம்எல்ஏ எஸ்.டி.கே. ஜக்கையன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago