ஈரோடு நல்லியம்பாளையம் மதுரைவீரன் கோயிலில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் 6 பவுன் நகை திருடப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு நல்லியம்பாளையம் ஓடைமேடு பகுதியில் மதுரைவீரன் கோயில் அமைந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து கோயிலில் இருந்த 2 அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை, பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 6 பவுன் சுவாமி நகைகளைத் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago