புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கரோனா காலத்தில் வேலையிழந்த தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் உட்பட அனைவருக் கும் ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற் சங்கங்கள் சார்பில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி தென்னூர், சிந்தாமணி அண்ணாசிலை, ரங்கம், காந்தி மார்க்கெட், ஏர்போர்ட், குட்ஷெட், மிளகுபாறை, திருவெறும்பூர் உட்பட 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவற்றில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், மாவட்டத் தலைவர் ராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாதாகோயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், மெய்யப்பன், ஆதிலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.தர், மாவட்ட நிர்வாகிகள் மாரிக்கண்ணு, டி.சந்தானம், கே.ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago