திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் இரா.வயலட் அறிக்கை: தமிழக அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், தேசிய வாசிப்பு இயக்கம் சார்பில் புத்தாண்டில் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப் படுத்துவதற்காக புத்தகங்களோடு புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று (31-ம் தேதி) தொடங்கி வரும் 2-ம் தேதி வரை புத்தகங்களோடு புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.
இதையொட்டி ஆயிரக்கணக் கான தலைப்புகளில் புத்தகங்கள் மைய நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த புத்தக கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்களை வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். புத்தகங்கள் வாங்கும் வாசகர்களில் சிலரை தினந்தோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் என்று சிறப்பு நிகழ்வுகள் மாலை நேரங்களில் நடைபெறுகிறது.
புத்தகங்களோடு புத்தாண்டு சிறப்பு புத்தக கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago