தமிழகத்தில் சிறுபான்மையின த்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் தங்கள் தொழி லுக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் குறைந்த வட்டியில் புதிய கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடன் திட்டத்தின் கீழ் கைவினைக் கலைஞர்களுக்கு மட்டும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களின் ஆண்டு வருமானம் அதிகபட்சமாக கிராமப்புறத்தில் ரூ.98,000, நகர்புறத்தில் ரூ.1,20,000 வரை இருக்கலாம். தனிநபர் கடன் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வழங்கப்படும். 6 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் பெறப்படும் கடனை 5 ஆண்டு களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
சுய உதவிக்குழு உறுப்பினர் களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கடன் வழங்கும் பல்வேறு திட்டங்களும் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago