அனைத்து நோய்களுக்கும் மினி கிளினிக்கில் சிகிச்சை அளிக்கப்படும் என, அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தெரிவித்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள வெள்ளாளன்குளம், கடம்பன்குளத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடை பெற்றது. ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார்.
மினி கிளினிக்கை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்துவைத்து பேசியதாவது: தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 41 மினி கிளினிக் அமைய உள்ளன.
இந்த கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பர்.
அம்மா மினி கிளினிக்கில் புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை, தாய் சேய் நலப் பணிகள், தடுப்பூசி வழங்குதல், அவசர சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை, புற்றுநோய் கண்டுபிடித்தல் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சை, முதியோர்களுக்கான சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளப்படும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, சிறுநீரில் உள்ள உப்பின் அளவு மற்றும் ஹீமோகுளோபின் ஆகிய ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago