திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் தனியார் இலகுரக வாகனங்களின் (கார், ஜீப், வேன், ஆட்டோ, சுமை ஆட்டோ, லாரி மற்றும் இதர வாகனங்கள்) முகப்பில் பொருத்தப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனத்தினுள் பயணிப் பவர்களின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. அவற்றை வாகனத்தில் பொருத்துவது மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, தடுப்பு கம்பிகள் பொருத்தியிருக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் உரிமை யாளர்கள் அதை உடனடியாக அகற்றிவிட்டு பயணிக்க வேண்டும். மீறும் வாகனங்களின் மீது காவல்துறை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago